பிரான்ஸின் வடக்குப் பிராந்தியத் (Hauts-de-France region) தலைநகரமாகிய லீல் (Lille) நகரில் இரண்டு கட்டடங்கள் நேற்றுக் காலை இடிந்து வீழ்ந்துள்ளன. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடிகள் கொண்ட ஒரு கட்டடம் இடியுண்டதை அடுத்தே அதனோடு நெருக்கமாக அமைந்திருந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் அடங்கிய பழைய கட்டடம் இடிந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.
கட்டடம் இடிவதற்கு முன்னரேயே டசின ககணக்கானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றபபட்டுவிட்டனர் என்று லீல் நகரின் சோசலிஸக் கட்சி மேயர் மார்டின் ஊப்ரி (Martine Aubry) அம்மையார் தெரிவித்துள்ளார்.
பழைய கட்டடத்தில் வசிக்கின்ற மாணவனான 22 வயது இளைஞர் ஒருவர் முதல் நாள் இரவு கட்டடத்தின் உள்ளே நடைபாதைச் சுவர்களில் வெடிப்புகளையும் நொருங்குவது போன்ற ஒலிகளையும் அவதானித்துள்ளார். அதுபற்றி உடனடியாகத் தனது இரண்டு நண்பர்களுக்குத தெரியப்படுத்தி மூவருமாகக் குடியிருப்பாளர்களை எச்சரித்ததுடன் அவசர மீட்புப் பணியினருக்கும் அறிவித்தனர். சுவர்களில் ஏற்பட்ட வெடிப்பைப் படம் எடுத்து ருவீற்றர் தளத்தில் பகிர்ந்தனர்.
அதிகாலை 5.47 மணிக்குப் படம் பகிரப்பட்டது. அதற்குச் சரியாக மூன்று மணி நேரம் கழித்துக் காலை ஒன்பது மணியளவில் இரண்டு கட்டடங்களும் இடிந்து வீழ்ந்தன. அதற்கு முன்பாகவே குடியிருப்பாளர்கள் பெரும்பாலானோர் கட்டடத்தை விட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர். எனினும் வயோதிபர் ஒருவர் கட்டட இடிபாடுகளிடையே இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டார். அதேசமயம் மருத்துவர் ஒருவர் இடிபாடுகளில் சிக்குண்டுள்ளார் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளை மெதுவாக அகற்றும் பணிகள் நேற்றுப் பகல் முழுவதும் நடைபெற்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிபடுகளில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது. அது பெரும்பாலும் அந்த மருத்துவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேசமயம் இடிந்த கட்டடத்துக்கு வலப் புறமாக அதே தெருவில் அமைந்திருந்த மூன்றாவது கட்டடம் ஒன்றின் சுவர்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
அது எந்நேரமும் இடிந்து விழக் கூடிய ஆபத்துக் காணப்படுகிறது. அதனால் அதனை இடித்து வீழ்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டடங்களுக்கு நடுவே புதிய கட்டடத்தை நிறுவுகின்ற நிர்மாண வேலைகள் காரணமாகவே அவற்றில் விரிசல்கள் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது.