மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்த நிலையில் சாரதி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இசைமாலை தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாரதி மயக்க நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து முருங்கன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.