யாழ்.கல்வியங்காடு - ஜீ.பி.எஸ் மைதான வீதியில் மாவா பாக்கு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த உடுவில் பகுதியை சேர்ந்த 45 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரும் அவரிடம் பாக்கு வாங்குவதற்கு வந்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிராந்திய சிரேஸ்டபொலிஸ் அத்தியட்கரின் கீழ் செயற்படும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ 100 கிராம் கஞ்சா கலந்த மாவா போதை பொருள் மீட்கப்பட்டது.
போதை பாக்கை வாங்குவதற்கு வந்திருந்த இருவரும் யாழ்.திருநெல்வேலி - கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
குறித்த வியாபாரி யாழ்.புறநகர் பகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் கொண்டு சென்று மாவா போதை பொருளினை விற்பதாகவும் தனக்கு நல்ல வருமானம் கிடைப்பதாகவும்
நீண்டகாலமாக இந்த தொழிலை மிகவும் சூட்சமமானமுறையில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.