வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி உயிரிழந்திருந்தார்.
உரிழந்த மாணவி யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் முதலாமாண்டில் கல்வி பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமகிருஷ்ணன் சயாகரியின் பெற்றோர், விசேட தேவையுடையவர்கள் என்பதோடு, சகோதரன் மற்றும் சகோதரியை கொண்ட குடும்பத்தில், ராமகிருஷ்ணன் சயாகரி மூத்த பிள்ளை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்னாரது இறுதிக் கிரியைகள் இன்று (06) மாலை நாவலப்பிட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.