யாழ்.பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றியதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணத்தினை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் குறித்த பெண், முறைப்பாடு பதிவு செய்தவரை கனடாவிற்கு அனுப்பாமலும், பெற்றுக் கொண்ட பணத்தினையும் மீள வழங்காமலும் இருந்த காரணத்தினால் இவ்வாறு முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தங்களிடம் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக, கடந்தவாரம் இருவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலும் ஒருவர் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.