யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி குறைவடைந்து ஈரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அழற்சியால் அண்மைக்காலமாக பல உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை யாழில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு விஷேட படைப்பிரிவொன்று உருவாக்கப்பட்டு விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகம் தெரிவித்தது.