பிரான்ஸ், La Courneuve நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை மாலை முதியவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அங்குள்ள Georges-Valbon நகரசபை பூங்காவுக்கு வருகை தந்த ஆயுததாரி ஒருவன், அங்கிருந்த 74 வயதுடைய முதியவர் ஒருவரை திடீரென கத்தியால் குத்தியுள்ளான். சரமாரியாக இடம்பெற்ற இத்தாக்குதலில் குறித்த முதியவர் பலத்த காயமடைந்து பலியானார்.
மாலை 4.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டு தாக்குதலாளி கைது செய்யப்பட்டான்.
மேற்படி சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பூங்காவானது தமிழர்கள் அதிகம் வருகை தரும் இடமாகும்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.