யாழ்., வடமராட்சியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (30) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலத்துக்குட்பட்ட ஜே/369 கட்டைவேலி பகுதியில் கடமையாற்றும் புலோலி கிழக்கு, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் லலித் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தமது அலுவலகத்துக்குக் கடமைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின் வீடு திரும்பும் வழியில் நெஞ்சு வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது மரணமடைந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் கிராம உத்தியோகத்தருக்கிடையில் நடைபெற்ற முகாமைத்துவப் போட்டியில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் முதலிடத்தைப் பெற்றவராவர்.