ஓமானில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பெண்கள்! திரும்பி வந்த பெண் அதிர்ச்சித் தகவல்!! (காணொளி)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தொழில் வாய்ப்புத் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் அங்கு தொழில் எதுவும் வழங்கப்படாது தவாறான தொழிலுக்கு வற்புறுத்தப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத் தகவலை தொழில் வழங்குவதாகத் தெரிவித்து ஏமாற்றி ஓமான் அழைத்துச் செல்லப்பட்டு நாடு திரும்பிய இரு பெண்கள் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் சங்கிலிகளால் கால், கைகள் கட்டப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதான பெண்ணொருவர் கடந்த ஜூன் மாதம் டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும் அங்கு எவ்வித தொழிலும் வழங்கப்படாத நிலையில் மூன்று மாதங்களின் பின்னர் நாடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவர் கடந்த செப்ரெம்பர் மாதம் ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரண்டு மாதங்களில் நாடு திரும்பியுள்ளார்.

இவ்விரு பெண்களுமே ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
 
Previous Post Next Post