பிரான்ஸில் "சிமிக்" (Smic) என்கின்ற ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் ஜனவரி 2023 முதல் சிறிய தொகையில் அதிகரிக்கிறது. மாதச் சம்பளத்தில் ஏற்படவுள்ள 1.8 வீத அதிகரிப்பு மூலம் ஒருவர் 24.90 ஈரோக்களை (net) மேலதிகமாகப் பெற்றுக் கொள்வார். தற்சமயம் 1329.05 ஈரோக்களாக உள்ள அடிப்படை ஊதியம் இதன் மூலம் 1352.97 ஈரோக்களாக உயரும். இது அரசு வழங்கும் அதிகரிப்பு அல்ல. நாட்டின் பண வீக்க வீதத்துக்கு ஏற்ப சம்பளத்தில் வருடாந்தம் இயல்பாகச் செய்யப்படுகின்ற அதிகரிப்பு ஆகும்.
சில தினங்களில் தொடங்கவுள்ள புத்தாண்டில் மேலும் சில மாற்றங்கள் ஏற்படவுள்ளன. பாரிஸ் பிராந்தியப் போக்குவரத்துக்கான நவிகோ என்கின்ற மாதாந்தப் பயணப் பாஸ் (passe Navigo) கட்டணம் சுமார் பத்து ஈரோக்கள் அதிகரிக்கப்படுகிறது. 2017 ஜனவரி முதல் 75.20 ஈரோக்களாக இருந்த பயணப் பாஸ் கட்டணம் 12 வீத அதிகரிப்புடன் இனி 84.10 ஈரோக்களாக உயர்கிறது.
ஒரு தடவை பயணிப்பதற்கான சாதாரண மெற்றோ ரயில் ரிக்கெற் (single ticket) ஒன்றின் விலை 1.90 ஈரோவில் இருந்து 2.10 ஈரோக்களாக அதிகரிக்கிறது. அதே சமயம் தேசிய போக்குவரத்து நிறுவனம் (SNCF) அதிவேக ரயில்களது (TGV) கட்டணங்களை ஐனவரி 10 முதல் சுமார் 5%வீதத்தால் அதிகரிக்க உள்ளது.
"பேயாஸ்"கடவைகள் (barrières de peages) என்று சொல்லப்படும் நெடுஞ்சாலைகளைக் கடப்பதற்கான கட்டணங்களும் ஜனவரி முதல் 4,75%. அதிகரிக்கிறது. எரிபொருள் நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் வாகனச் சாரதிகளுக்கு இந்த அதிகரிப்பு மேலும் ஒரு சுமையாகிறது. இதுவும் ஆண்டுதோறும் செய்யப்படுகின்ற உயர்வு ஆகும். இந்த வருடம் நெடுஞ்சாலைக் கட்டணம் 2% வீதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வு வயதைக் கடந்த முதியவர்களுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவிலும் சிறு அதிகரிப்புச் செய்யப்படுகிறது. CNAV, CNRACL, CNAVPL பிரிவுகளுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களுக்கு மூன்றாவது தடவையாக அடிப்படை ஓய்வூதியம் 0.8%. வீதத்தால் அதிகரிக்கப்படுகிறது. அதே சமயம் ஓய்வூதியம் பெறாத வயோதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற சமூக நலக் கொடுப்பனவும் (L’allocation de solidarité aux personnes âgées - ASPA) தனி ஆளுக்கு 960 ஈரோக்களாகவும் தம்பதியருக்கு 1,492 ஈரோக்களாகவும் உயர்கிறது.
பாலுறவு மூலம் அதிகரிக்கின்ற தொற்று நோய்களைத் தடுப்பதற்காக 26 வயதுக்குட்பட்ட இளையவர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அதிபர் மக்ரோன் அண்மையில் இதனை அறிவித்திருந்தார். 18-25 வயதுகளையுடையோருக்கு ஐனவரி முதல் மருந்தகங்களில் ஆணுறைகள் இலவசமாகக் கிடைக்கும்.