
“இம்மானுவல் மக்ரோன் விளாடிமிர் புட்டினை (இரஷ்ய ஜனாதிபதி) சந்திக்கும் போது அவர் வேறு மாதிரி மாறிவிடுகிறார். ஒவ்வொரு தடவையும் மக்ரோன் ஒவ்வொரு கருத்தை வெளியிடுகிறார். ஆனால் பேச்சுவார்த்தை மேசையில் அவர் வேறு விதமாக நடந்துகொள்கிறார். இது பயனளிக்காது!’ என Zelensky தெரிவித்தார்.
மேற்படி கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதன்போதே மேற்படி கருத்தினை Zelensky தெரிவித்தர்.
இரஷ்யா-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இம்மானுவல் மக்ரோன் உக்ரேனுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார். ஆயுதங்கள் வழங்குவது, நிதி உதவி வழங்குவது, சர்வதேசங்களில் உக்ரேனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என தொடர்ச்சியாக செய்ற்பட்டு வரும் இம்மானுவல் மக்ரோன் மீது இத்தகைய விமர்சனத்தை Zelensky முன்வைத்துள்ளார் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, Brussels நகரில் இடம்பெறும் ஐரோப்பிய கூட்டத்தின் போது (வியாழக்கிழமை) “நான் மீண்டும் விளாடிமிர் புட்டினை தொடர்புகொண்டு யுத்தம் தொடர்பாக உரையாடுவேன்!” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.