ஜேர்மனியில் விசா நிராகரிக்கப்பட்ட குடியேற்றவாசிகளுக்கு வதிவிட அனுமதி! நிறைவேறியது புதிய சட்டம்!!


ஜேர்மனியில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட குடியேற்றவாசிகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வந்திருந்தால் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெறக் கூடிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் அகதி விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு Chanchen Aufenthalt என்று சொல்லப்படுகின்ற பரீட்சார்த்தமான வதிவிட விசா ஒன்றை வழங்குவதற்கான சட்டமே நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சிகளின் பாரிய எதிர்ப்புக்கும் மத்தியில் ஜேர்மனியின் கூட்டு அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப் புதிய சட்டத்தின் மூலம் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெற்றுக் கொள்ள,
  • 31.10.2022 ஆம் திகதியன்று ஆகக் குறைந்தது 5 வருடங்கள் தற்காலிக வதிவிட விசாவை வைத்திருத்தல் வேண்டும்.
  • குற்றங்கள் எதுவும் புரியாமல் இருந்திருக்க வேண்டும்.
  • தங்களது அடையாளங்களை மறைக்காமல் இருந்திருத்தல் வேண்டும்.
இது அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் 8 மாதம் Chanchen Aufenthalt என்று சொல்லப்படுகின்ற பரீட்சார்த்தமான வதிவிட விசா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தாங்கள் தங்கள் சொந்த வருமானத்தில் வாழ்ந்து மொழி அறிவைக் கொண்டிருந்தால் நிரந்தர வதிவிட விசா வழங்கப்படும் என்றும் குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post