நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் காலநிலை குறித்து கேட்டறிந்ததன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.