யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் புகையிரதத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று(01) நண்பகல் ஒரு மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை காணப்படுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.