பிரான்ஸில் காட்டுப் பகுதியிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!

பிரான்ஸின் Yvelines மாவட்டத்தில் உள்ள Saint-Germain-en-Laye காட்டுப்பகுதியில் இருந்து இரு சிறுவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை காலை இரு சடலங்களும் மீட்கப்பட்டன. குறித்த காட்டுப் பகுதியின் அருகே உள்ள Agro-Campus விவசாய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதலில் சடலங்களை பார்த்ததாகவும், பின்னர் காவல்துறையினரை அழைத்ததாகவும் அறிய முடிகிறது.

15 வயதுடைய இரு சிறுவர்களது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

சிறுவர்களது மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தற்கொலையாக இருக்கலாம் எனும் சந்தேகம் வலுத்துள்ளது.


Previous Post Next Post