காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் யுவதியின் சடலத்துக்கு காதலன் தாலி கட்டிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் யோதிகா (வயது-22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
பாடசாலைக் காலத்திலிருந்தே சக மாணவன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் இவரின் காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த யுவதி நேற்று முன்தினம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
அவரின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காதலன் நண்பர்களுடன் அங்கு சென்று குடும்பத்தினரின் எதிர்ப்பினையும் மீறி யோதிகாவின் சடலத்துக்குத் தாலி கட்டியுள்ளார்.