முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசலை சிறுமியியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமன்உறவு முறையான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் இல்லாத நிலையில் தந்தை மற்றும் சகோதரனின் அரவணைப்பில் சிறுமி வாழ்ந்து வந்துள்ளார்.
அச் சிறுமியின் மாமனின் மனைவி வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையிலேயே குறித்த சிறுமியுடன் பாலியல் தொந்தரவில் மாமன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வீட்டில் உறவினர்கள் இல்லாத நிலையில் வீட்டிற்குள் சென்ற மாமன் தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை யாரிடம் சொல்வது என்று தெரியாத நிலையில் பாடசாலை ஆசிரியரிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டு தொடர்ந்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மருத்துவ பரிசோதனை அறிக்கையில் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பெண்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு குறித்த குடும்பஸ்தரை வியாழக்கிழமை (29) கைது செய்துள்ளானர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ள குடும்பஸ்தர் சிறுமிக்கு அக்கா முறையான 20 வயதுடைய யுவதியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வந்துள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.