யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தில் கல்வி கற்ற தவராசா தர்ஷினி (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
தனது மரணத்துக்குத் தானே காரணம் என்றும் பெற்றோரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் தனது தங்கைக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அக் கடிதத்தில் தொலைபேசி பாவனை தொடர்பிலும் தங்கைக்கு அறிவுரை கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியதாகவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றபோது பகிடிவதை காரணமாக மன உலைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒன்றரை வருடத்திற்கு முன் இவருக்குப் பதிவுத் திருமணம் நடந்தது என்றும், தற்போது பெற்றோருடன் வசித்து வருகின்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.