யாழ். திருநெல்வேலி, சைவப் பாடசாலை வீதியில் உள்ள வர்த்த நிலையங்களுக்குப் பொருட்களை ஏற்றி, இறக்கும் வாகனங்களினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த வீதியின் நடுப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்றி, இறக்கப்படுகின்றது. இதன் காரணமாக பிற வாகனங்கள் அவ் வீதியூடாகப் பயணிப்பது தடைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப் பகுதியில் உள்ள சைவப் பாடசாலைக்கு இவ் வீதியால் பயணிக்கும் மாணவர்கள், மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கரவண்டிகள் மற்றும் இதர வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போது வாகனங்கள் இடையூறு விளைவிப்பதால் பாடசாலைக்கு தாமதமாக மாணவர்கள் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.