கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வீடொன்றில் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள லேன்ட் மார்க் தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 26 வயதான இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த இளம் பெண் தனது பெற்றோருடன் தொடர்மாடி குடியிருப்பில் 6 வது மாடியில் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் கணவன் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கோவிட் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர் இந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை பதிவு திருமணம் செய்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.