கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த நபர் வீதியில் கிடந்த 95,000 பணத்தினை எடுத்து கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்திருந்த நிலையில், மேற்படி பணத்திற்கு யாரும் உரிமை கோராத நிலையில் குறித்த பணம் இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் குறித்த பணத்தினை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வீதியில் கிடந்து எடுத்த பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்கு நல்லுள்ளம் கொண்டவரை பலரும் பாராட்டியுள்ளனர்.