பிரான்ஸ் தலை நகரான பாரிஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் 69 வயதான முதியவர் ஒருவர் கைதாகியுள்ளார். குறித்த அதிர்ச்சி சம்பவமானது நகரின் 10வது வட்டாரத்தில் நடந்துள்ளது.
உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலில், இந்த பயங்கர சம்பவமானது rue d'Enghien வீதியில் உள்ள குர்திஷ் கலாச்சார மையம் அஹ்மத்-காயாவில் நடந்தது என குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், விசாரணை முன்னெடுக்கப்படு வருவதால், சம்பவம் நடந்த பகுதியை மக்கள் தவிர்க்க வேண்டும் என பாரிஸ் பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர் ரயில் சேவை நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, கைது நடவடிக்கையின் போது அந்த நபரிடம் இருந்து பயன்படுத்திய துப்பாக்கியை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கொலை விசாரணை, திட்டமிட்டு படுகொலை செய்தல், காட்டுமிராண்டித்தனமாக பொதுவெளியில் நடந்துகொள்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.
ஆயுததாரி தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளதுடன், அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் நீதிமன்ற அனுமதியுடன் வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.