வளர்ப்பு நாயைத் தாக்கிய மகனைத் தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் காத்தான்குடி, கல்லடி - நொச்சிமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பில் பிரபலமான பாடசாலையில் உயிரியல் பிரவில் கல்வி கற்கும் மாணவனான அகிலன் துஷ்யந்தன் (வயது-18) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த மாணவன் தனது வீட்டில் வளர்க்கும் நாயை அடித்ததாகவும், அதனால் தந்தை திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மேல் மாடியில் உள்ள சமையலறையில் தூக்கில் தொங்கியுள்ளான்.
உடனடியாக மாணவனை மீட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், நேற்று சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவனின் தந்தை பிரபல வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.