முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்த சிறுமி, அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக் கொண்டு வந்து சிறுமியுடன் ஒன்றாக இருக்க வைத்துள்ளார்.
சிறுமியின் தந்தை கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாயார் வீதிவேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது.
சிறுமிக்கு இளைஞர்கள் ஒருவகையான இனிப்பை கொடுத்துவிட்டு அதனை உண்ட சிறுமி மயக்க நிலைக்கு சென்ற நிலையில் சிறுமியினை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.
பிரதேச செயலக அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக குறித்த சிறுமி நேற்றைய தினம் (25) மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட போது இந்த விடையம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியால் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.