யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சேர்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
இளைவாலை - பொியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞர்கள் சிலர் தள்ளிச் சென்றுள்ளனர். இதன்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞர் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்திருக்கின்றது.
இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த புஸ்பராசா நிஷாந்தன் (வயது-29) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். தலையில் பலமாக தாக்கியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.