நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றுடன் கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் பேருந்தில் பயணித்த 42 பேர் படுகாயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளதாகவும் பேருந்தில் பயணித்த 42 பேர் படுகாயடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பேருந்து சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.