சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ். சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
கடந்த 21ஆம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று, பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடும்பமொன்றே விபத்தில் சிக்கியது.
St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த 18 வயதான மகன் உயிரிழந்தார். தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த காரில் பயணித்த மற்றும் இரண்டு மகள்களும், தாயாரும் சிறிய பாதிப்படைந்திருந்தனர்.