கொழும்பு - 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியான 24 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவியான அவரை, அவரது காதலனான சக பல்கலைகழக மாணவர் ஒருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகம கிரிவட்டுடுவ பகுதியைச் சேர்ந்த சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி என்ற (24) வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியாவார். கொழும்பு பல்கலைகழக கலைப்பீட மாணவனான காதலனே கொலை செய்து விட்டு, தப்பியோடியுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.