யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத் தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு10 மணியளவில் இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடாத்தியதோடு வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரிமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
பின்னர் ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தினையும் குறித்த கும்பல் திருடிச் சென்றுள்ளது.
வெட்டுக் காயங்களுக்குள்ளான வர்த்தக உரிமையாளர் யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.