விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சைப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்யப் போகின்றேன் எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கொழும்பு - 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம். ஓர் இடத்தில் அமர்ந்து பேசினோம். மற்றுமோர் இடத்துக்குச் சென்றோம். அங்கு வைத்தும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
“சூட்டி” என்னை மனநோயாளி என கூறிக்கொண்டே இருப்பாள். அதனால் நான், கடும் வேதனையில் இருந்தேன். எனக்கு கிடைக்காத அவள், வேறு எவருக்கும் சொந்தமில்லை. அவளை கொல்லவேண்டும் என நினைத்தேன்.
நான், சுமார் ஒரு மாதமாக திட்டமிட்டேன். உன்னிடம் அவசரமாக ஒன்றைச் சொல்லவேண்டும் எனக்கூறி, குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
இந்த சம்பவத்தில் மரணமடைந்த பெண், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடம் கல்விக்கற்கும் சத்துரி ஹங்சிஹா மல்லாகாராச்சி (வயது 24) என்பவராவார்.
அந்த பீடத்திலேயே கல்விப் பயிலும்பசிது சந்துரங்க (வயது 24) என்ற இளைஞனே, பொலிஸாரிடம் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான், 2019 ஆம் ஆண்டு முதல் மனநலநோய் சம்பந்தமாக மருந்து குடித்துவருகின்றேன். சூட்டியுடன் 2020 நண்பனானேன். அதன் பின்னர் காதலர்கள் ஆனோம். நான் மனநலநோய்க்கு மருந்து எடுப்பது அவளுக்கு தெரியாது. நானும் சொல்லவில்லை.
எனினும், கடந்த 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர். அதனை அவள் தெரிந்துகொண்டாள். என்னுடன் சண்டையிட்டாள். கோபித்துக்கொண்டாள். எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள்.
அவள் மாறிவிட்டாள், என்னை எப்போதும் “பைத்தியம்” என்றே ஏசுவாள். வேறு தொடர்பு இருப்பதால்தான் இவளிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைத்தேன். நான் தேடிப்பார்த்தேன். எனினும். அவ்வாறான தொடர்புகள் எவையும் அவளிடம் இல்லை.
அதுதொடர்பில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை. மனநோயாளி, பைத்தியம் என தொடர்ந்து என்னைத் திட்டியதால். நான் அவளுடன் கோபத்தில் இருந்தேன். மனவேதனை அடைந்திருந்தேன்.
தொடர்புகள் இன்மையால் அவள் எனக்கு சொந்தமில்லை. எனக்கு கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைப்பதற்கு இடமளிக்க மாட்டேன். ஆகையால், அவளைக் கொலைச் செய்யவேண்டுமென திட்டமிட்டேன்.
கடந்த வெள்ளிக்கிழமை அவள் என்னுடன் சண்டையிட்டால். நாங்கள் எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள். அப்போது அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
அவளைக் கொல்லவேண்டும் என நான் திட்டம் தீட்டினேன். வெல்லம்பிட்டிய சந்தியில் ஞாயிற்றுக்கிழமை கத்தியொன்றை வாங்கினேன்.
அந்த கத்தியை பேக்கில் போட்டுக்கொண்டு, செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழகத்துக்கு வீட்டில் இருந்தே வந்தேன்.
காலையில் முதலாவது விரிவுரையில் பங்கேற்றேன். பின்னர் சூட்டி உன்னுடன் விசேடமாக கதைக்கவேண்டும். குதிரை பந்தைய திடலுக்கு போவோம் எனக் கூப்பிட்டேன்.
வருவதற்கு முதலில் மறுத்தாள். நான் கட்டாயப்படுத்தியதால் விருப்பம் தெரிவித்தாள். நாங்கள் இருவரும் நடந்தே குதிரை பந்தைய திடலுக்கு வந்தோம்.
கொகுனு எனுமிடத்தில் நாங்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவளுடன் கோபத்தில் இருந்தமையால் அவளைக் கொல்லவே வேண்டுமென நினைத்தேன்.
உனக்கு சைப்ரைஸ் ஒன்றை நான் கொடுக்கவேண்டும். அப்படியே கூறிக்கொண்டு அவளை, குதிரை பந்தைய திடலின் ஸ்கோர்போர்ட் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றேன்.
அவள், மீண்டும் என்னிடம் கேட்டாள் என்ன சைப்ரைஸ் என்று, கைலிருந்த கைக்குட்டையால் அவருடைய கண்களைக் கட்டினேன். பையில் இருந்து சைப்ரைஸ் பார்சலை எடுப்பதைப் போல, கத்தியை எழுத்து கழுத்தில் குத்தினேன்.
பாரிய சத்தம் எழுப்பிய அவர், கண்களை கட்டியிருந்த கைக்குட்டை அவிழ்த்து, உதவிக்காக அபாயக் குரல் எழுப்பினாள். அப்போது, மற்றுமொரு தடவை கத்தியால் கழுத்திலேயே குத்தினேன்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில் இளைஞர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அவ்விடத்துக்கு ஓடிவருவதை கண்டு. அங்கிருந்து நான் தப்பியோடினேன்.
நான் தப்பியோடிய போது, சூட்டி இருந்த இடத்தை நோக்கி திரும்பி பார்த்தேன். எவ்விதமான அசைவுகளும் இன்றி சூட்டி விழுந்து கிடந்தாள்.
குதிரை பந்தைய திடலில் இருந்து வெளியே ஓடிச்சென்ற நான், பஸ்ஸில் ஏறி, வெல்லம்பிட்டியவுக்குச் சென்றேன்.
ரயிலில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ளவே சென்றேன். எனினும், நீண்ட நேரமாக ரயில் வரவே இல்லை. அதனால் வீட்டுக்குச் சென்றேன். அங்கு என்னுடைய புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு, களனி கங்கையில் பாய்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வதற்காக நடந்தே சென்று, கங்கையில் இரண்டு முறை குதித்தேன். இறுதியில் பொலிஸார் என்னை கைது செய்துவிட்டனர். என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
காதலனை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 18ஆம் திகதியன்று மாலை ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்