யாழ். தென்மராட்சி, மிருசுவில் வடக்கு வயல்கரை பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிருசுவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதான மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயல்கரை பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் கட்டுத்துவக்கு வெடித்து இவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று பொலிஸார் கருதுகின்றனர்.
இந்த பகுதியில் காட்டுப் பன்றிகளை இலக்கு வைத்து கட்டுத்துவக்கு சட்டவிரோதமாகப் பொருத்தப்படும் வழக்கம் இருப்பதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம், சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.