யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சங்கானைப் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதியைக் கடக்க முற்பட்ட போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்துச் சம்பவத்தில் சங்கத்தானையில் வதனி ஜூவலரி நகைக்கடை உயிரிமையாளரான சண்முகலிங்கம் பிரதாப் (வயது-37) என்வபவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர், சமிக்ஞை செய்தவாறு வீதியின் மறுபக்கம் செல்ல முயன்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வடமராட்சி பகுதி இளைஞன் சிறு காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் அவரை வைத்தியசாலைக்குள் வைத்து தாக்க முயன்றதையடுத்து, வைத்தியசாலையின் பின் பகுதியால் நோயாளர் காவு வண்டி மூலம் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் இன்னும் சில நாட்களில் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.