கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் அரச காட்டில் உள்ள மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட பாரவூர்தி ஒன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படிருந்தது.
குறித்த கைது கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக இடம்பெற்றது.
குறித்த வாகனம் பூநகரி வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (15.01.2023) இரவு இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பபெற்ற பொழுது வனஜீவராசிகள் அலுவலகத்தில் எவரும் இருக்கவில்லை எனவும், அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் நீர்த்தாங்கி மூலம் தீயினை அணைத்துள்ளனர்.
ஆயினும் வாகனம் முற்றாக எரிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.