யாழ்.வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சடலத்தை நாய் இழுத்துச் சென்றதால் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.
குழந்தை புதைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் கர்ப்பவதியாக இருந்துள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறித்த பெண்ணுக்கு வயது 36 என்றும் திருமணமாகி கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகின்றார் என்றும் ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்தது.
அத்துடன் தவறான தொடர்பின் மூலம் உருவான குறித்த சிசு, கடந்த முதலாம் திகதி இறந்து பிறந்துள்ளது. இதனால் வீட்டின் பின் பகுதியில் உள்ள மணல் பிரதேசத்தில் சிசு புதைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
பருத்தித்துறை நீதவான் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பெண்ணை எதிர்வரும் 11 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி: