மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை மாய்த்ததாக திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.
அதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் நேற்றிரவு பத்து மணியளவில் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி 13) காலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.