மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள தாத்தாமலை 40 வட்டை குளத்தின் துருசில் இருந்து குளத்தில் ஆசிரியர் ஒருவர் மற்றும் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுமுந்தன்வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
களுமுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 3 ஆண் மாணவர்களும் 4 பெண் மாணவர்களும் ஆசியரியருமாக 8 பேர் சம்பவதினமான இன்று காலை ஒன்றிணைந்து தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.
குறித்த சமயம் 3 ஆண் மாணவர்கள் அருகில் இருந்த படகில் குளத்திற்குள் சென்றுள்ளார்கள், அப்போது படகில் இருந்த துளையினால் படகிற்குள் நீர் வரத்து ஏற்பட்டு படகு மூழ்க ஆரம்பித்திருக்கிறது.
ரில் மூழ்கிய மாணவர்களை காப்பாற்றுவதற்கு ஆசிரியரும் குளத்திற்குள் சென்றுள்ளார். இந்நிலையில், மீட்பு முயற்சி தோல்வியடைந்த நிலையில் ஆசிரியரும் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.