சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ். சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் றஜிதன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் இருவரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் Oberhaldenstrasse 25, 9016 St. Gallen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland எனும் முகவரியில் பூதவுடல்கள் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 21ஆம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று, பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் குடும்பமொன்றே விபத்தில் சிக்கியது. St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த 18 வயதான மகன் உயிரிழந்தார். தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.