யாழ்.புத்தூர் நிலைவரை கிணற்றடியல் இரவோடிரவாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை பொதுமக்கள் எதிர்ப்பினை தொடர்ந்து இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
புத்தூர் நிலவரை கிணற்றடியல் இன்று காலை புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபையினர் மற்றும் பொதுமக்கள் கூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஊர் மக்களால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.
புத்தர் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்நிலாவரைக் கிணறு உள்ள பகுதியினை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.