காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்றவேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.