யாழ்.உரும்பிராய் - பொக்கணை பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 6 லீற்றர் கசிப்பினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் குறித்த பெண் இதற்கு முன்னரும் பல தடவைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. எனினும் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில்
நேற்று கோப்பாய் பொலிசார் 38 வயதுடைய குறித்த பெண்மணியை கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்து 6 லீற்றர் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.