மண்டைதீவு மகா வித்தியாலயத்திற்குப் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுமதில் திரை நீக்கம் செய்து, பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயின்று, புலம்பெயர் தேசங்களில் வாழும் பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் ஊடாக அனைவரினதும் நிதிப் பங்களிப்புடன் இம் மதில் அமைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் மண்டைதீவுப் பகுதியில் இடம்பெறும் கல்விச் செயற்பாடுகள், அபிவிருத்தி, மாணவர்களுக்கான ஊக்குவிப்புக்கள் என பலதரப்பட்ட சேவைகளை புலம்பெயர் மற்றும் உள்ளுர் மக்களின் நிதிப் பங்களிப்புடன் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.