பிரெஞ்சு நகரம் ஒன்றில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மேயர் ஒருவரின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில், Nantes நகருக்கு மேற்கே அமைந்துள்ள Saint-Brevin-Les-Pins என்ற பகுதியில், புகலிடக்கோரிக்கையாளர் வரவேற்பு மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
இந்த மையத்துக்கு அப்பகுதி மேயரான Yannick Morez உட்பட பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.
சமீபத்தில், அந்த மையத்தை ஆதரிப்போரும் எதிர்ப்பவர்களும் கைகலப்பில் ஈடுபட்ட ஒரு சம்பவமும் நடைபெற்றது.
அந்த புகலிடக்கோரிக்கை மையத்துக்கு மேயர் ஆதரவளிப்பதால், அவருக்கும் பிற ஆதரவாளர்களுக்கு சமூக ஊடகங்களில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 5.00 மணியளவில், யாரோ மர்ம நபர்கள் மேயர் வீட்டுக்குத் தீவைத்துள்ளனர்.
அந்தத் தீயில் மேயர் வீடு பாதிக்கப்பட்டதுடன், அவரது இரண்டு கார்களும் எரிந்து நாசமாகிவிட்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாக, அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் மேயருக்கு தகவல் கொடுத்ததால், வீட்டுக்குள்ளிருந்த அவரும் அவரது மனைவியும் உயிர்தப்பியுள்ளனர்.