பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய ரக வாகனத்தினால் மோதி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பளை பகுதியைச் சேர்ந்த உதயபாஸ்கரன் நிருபராஜ் (வயது -28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையை இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பின்னால் சென்ற வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.