
இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ். சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர் தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இதன் போது பெண் கச்சான் வாங்க சென்றபோது சில வியாபாரிகள் பெண்ணை அநாகரீகமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதனை அவதானித்த கணவர் , வியாபாரிகளுடன் முரண்பட்டபோது கணவர் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.