யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை ஆங்காங்கே அவதானிக்க முடிகிறது.
ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் வடகிழக்கில் அரசினால் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு கிழக்கில் இன்றைய தினம் முழுமையான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறுகின்றன.
தனியார் பேருந்து சேவைகள் இயங்காத நிலையில் முச்சக்கர வண்டி சேவைகள் யாழ் நகரில் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
பொதுமக்கள் அங்காங்கே வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.
யாழ். மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் சந்தைகள் யாவும் மூடப்பட்டு வர்த்தகர்கள் தமிழ் கட்சிகளினால் அழைப்பு விடப்பட்ட கடைடைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்.
அத்தோடு பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக செயற்பாடுகளும் ஸ்தம்பித்து உள்ளதை அவதானிக்க முடிந்தது.