யாழ்.கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும்போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜிதரன் (வயது 40) என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.