யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் விபரம் வெளியாகி உள்ளது.
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்தில் மானிப்பாய் ரஞ்சித் மோட்டோர்ஸ் ஊழியர்களான கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த கீதாரட்ணம் திவ்யா (வயது 31) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது காரில் பயணித்த நால்வர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார் மற்றும் மோட்டார் சைக்கிளின் அதிவேகமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ப்புடைய செய்தி: