தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்பட 24 படங்களை இயக்கியும், ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.