கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பகுதியில் தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவர் அவரை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அந்தப் பெண் படுகாயமடைந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
வெலிஓயாப் டையினரின் சோதனைச் சாவடியிலிருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் எந்தவித உத்தியோகபூர்வ அறிக்கைகளையும் விடுக்கவில்லை.
கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை அருகே இருந்த காட்டுக்குள் இருந்து வந்த இருவர் வாயைப் பொத்தி காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி காட்டிலிருந்து அந்தப் பெண் வெளியே ஓடி வந்து விழுந்த பின்னரே ஏனைய பணியாளர்களை அவரைக் கண்டு உதவி செய்து உடனடியாகத் தமது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு விரைந்தனர்.
பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் சொல் முடியாது. அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. அவர் உளவிய ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உடனடியாக மனநல சிகிச்சை தேவைப்படுவதால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனக்கு நடந்தவைகள் குறித்துப் பேசக்கூடிய உடல் நிலையிலோ, மனநிலையிலே அவர் இல்லாதபடியால் அவருக்கு நடந்தவைகள் குறித்து உறுதியான தகவல்கள் எதனையும் தெரிவிக்க முடியாது என முல்லைத்தீவு வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.