வழக்கமான மேதினப் பேரணி, இந்த ஆண்டு அரசுக்கெதிரான போராட்டமாக மாற, கலவர பூமியானது பிரான்ஸ்.
வழக்கமாக மே 1ஆம் திகதியன்று பிரான்சில் தொழிலாளர் தின பேரணிகள் நடைபெறும் நிலையில், இம்முறை மேதினப் பேரணி, ஓய்வூதிய வயதை அதிகரித்த அரசுக்கெதிரான போராட்டமாக மாறியது.
தலைநகர் பாரீஸிலும், மற்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையே மோதல் உருவானது.
அந்த மோதலில் பிரான்ஸ் முழுவதிலுமாக குறைந்தது 108 பொலிசார் காயமடைந்தார்கள், சுமார் 291 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
பிரான்ஸ் அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறித்து கண்டனங்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலோ பிரான்சில் போராட்டக்காரர்களுக்கெதிரான பொலிஸ் வன்முறையைக் கண்டித்துள்ளது.